உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரச்னைகளுக்கு தீர்வு; பா.ஜ., வேட்பாளர் உறுதி

பிரச்னைகளுக்கு தீர்வு; பா.ஜ., வேட்பாளர் உறுதி

திருப்பூர்;திருப்பூர் வடக்கு தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தத்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, நுாறு வாக்குறுதிகளை தயார் செய்து மக்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று காலை திருப்பூர் - பி.என்., ரோடு, கூத்தம்பாளையம், பாண்டியன் நகர், அம்மன் நகர், பொம்மநாயக்கன்பாளையம், போயம்பாளையம் பிரிவு, கங்கா நகர் ஆகிய பகுதி களில் ஓட்டு சேகரிக்க சென்ற போது, பொதுமக்கள் உற்சாகமாக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்து, ஆரத்தி எடுத்தனர்.மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, வெற்றி பெற்ற பின், அனைத்தும் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.இதையடுத்து, பிச்சம்பாளையத்தில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில் வேட்பாளர் ஓட்டு சேகரித்தார். வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கோரிக்கைகளை கேட்டறிந்தார்.எஸ்.வி., காலனியில் உள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு வேட்பாளர் முருகானந்தம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். கொங்கு மெயின் ரோடு, பி.என்., ரோடு இளங்கோ நகர், துரைசாமி நகரில் ஓட்டு சேகரித்தார்.பாரப்பாளையத்தில் உள்ள முருகன்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை