உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு ஊக்கத்தொகை: சாய ஆலைகள் எதிர்பார்ப்பு

சிறப்பு ஊக்கத்தொகை: சாய ஆலைகள் எதிர்பார்ப்பு

திருப்பூர் : திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க வளாகத்தில், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பரிசோதனைக்கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது.தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பரிசோதனைக்கூடத்தை திறந்து வைத்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசினார்.

சிறப்பு ஊக்கத்தொகை தேவை

தலைமை வகித்து பேசிய சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:சாய ஆலைகளுக்கு பெரிய சுமையாக இருப்பது மின் கட்டணம்; பொது சுத்திகரிப்பு நிலைய இயக்கத்தில், மின் கட்டண சுமை அதிகரித்துள்ளது. மானியத்துடன் சோலார் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி கட்டமைப்பை நிறுவும் திட்டத்தை அறிவிக்க வேண்டும். நாட்டில் வேறு எங்கும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுவதில்லை.பின்னலாடை உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது; பசுமை சார் உற்பத்தி என்ற அடிப்படையில், சாய ஆலைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

சங்கங்கள் ஒன்றிணைந்து பயணம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்:பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியில், சாய ஆலைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சாயத்தொழில் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் எப்போதும் துணை நிற்கும். ஒட்டுமொத்த பனியன் தொழில் வளர்ச்சிக்காக, அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.

வேறெங்கும் இல்லா தொழில்நுட்பம்

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:இந்தியாவிலேயே, திருப்பூரில் மட்டும் தான், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் இருக்கிறது; வேறு எங்குமே இல்லை. பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு, அதிக உற்பத்தி செலவில் சுத்திகரிக்கிறோம்; கடும் செலவில் செயல்படுத்தும் திருப்பூருக்கு, மத்திய, மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

மின் கட்டணம் குறைய வேண்டும்

பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்க (நிட்மா) தலைவர் ரத்தினசாமி:மத்திய, மாநில அரசுகள் குறு, சிறு தொழில்கள் பாதுகாக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும். அனைத்து தொழில் அமைப்புகளும் இணைந்து, தொழில் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். பின்னலாடை தொழில் இன்னும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். மின் கட்ட ணத்தை குறைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.முன்னதாக சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி வரவேற்றார்.பொருளாளர் மாதேஸ்வரன், துணைத்தலைவர்கள் பக்தவத்சலம், ஈஸ்வரன், இணைச்செயலாளர்கள் செந்தில்குமார், சுதாகரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக, மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில் குமார், சரவண குமார் மற்றும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.துணை மேயர் பாலசுப்பிரமணியம், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், 'டிப்' தலைவர் மணி, 'டீமா' தலைவர் முத்து ரத்தினம், திருப்பூர் ரைசிங் சங்க தலைவர் ராமசாமி, காம்பாக்டிங் சங்க பொதுசெயலாளர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் பிளீச்சிங் சங்க பொதுசெயலாளர் கிரி, இந்திய தொழில் கூட்டமைப்பின், திருப்பூர் கிளை தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி