உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி, : அவிநாசி, கைகாட்டிப்புதுார், அம்பேத்கர் வீதியில், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.பதிமூன்று ஆண்டுகளுக்கு பின், பொங்கல் பூச்சாட்டு விழா, 10ம் தேதி துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தது.நேற்று முன்தினம் இரவு மகா முனி பூஜை நடந்தது. நேற்று காலை படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் ஆகியவை நடந்தன. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நுாறு பெண்கள் தீர்த்த குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல், சாமி ஊர்வலம் வருதல், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடந்தன. இன்று சுவாமி ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்