உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் ஆண்டு விழா

ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் ஆண்டு விழா

உடுமலை:உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டுவிழா சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், ஆறாவது ஆண்டுவிழா சிறப்பு வழிபாடு நேற்று முன் தினம் துவங்கியது. முதல் நாள் அதிகாலையில் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது.காலை, 8:30 மணிக்கு புற்றுக்கோவிலிலிருந்து பால்குடம் புறப்பாடு நடந்தது. ரேணுகாதேவி சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மாலையில் பத்மாவதி தயார், ஆண்டாள் சுவாமிகளுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது.மாலையில் 'வேங்கடேச நாதம்' என்ற தலைப்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலையில் சிறப்பு ேஹாமம், நவகலச ஸ்தாபிதம், வேங்கடேசபெருமாளுக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.காலை, 10:00 மணிக்கு பஜனை நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி