உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா 

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா 

திருப்பூர்;திருப்பூர், மூர்த்தி நகர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழாவில் நேற்று, முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது.வரசித்தி விநாயகர், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில், அத்திபிரஹத் வாராஹி அம்மன் கோவில், 25ம் ஆண்டு பொங்கல் விழா 20ம் தேதி, பொரிமாற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 27ம் தேதி கம்பம் நட்டு, அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், நேற்ற, முளைப்பாலிகை ஊர்வலமும், பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை திருக்கல்யாண உற்சவமும், மாவிளக்கு மற்றும் பொங்கல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு, கம்பம் கங்கையில் விடப்படுகிறது; நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், 31ம் தேதி அன்னதானமும் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை