திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, அவிநாசிபாளையத்திலுள்ள ஜெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதித்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய, 50 பேரும் தேர்ச்சி பெற்றனர்; 19 பேர் பல்வேறு படங்களில் சென்டம் பெற்றனர். மாணவி நேத்ரா ஸ்ரீ, 496 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம், மாவட்ட அளவில் மூன்றாமிடம், மாநில அளவில் நான்காமிடம் பெற்று சாதனை படைத்தார்.பிளஸ் 2வில் தேர்வெழுதிய, 38 பேரும் தேர்ச்சி பெற்றனர்; பல்வேறு பாடங்களில், மொத்தம், 19 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். மாணவி அபிஸ்ரீ, 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.பள்ளி தலைவர் தங்கராஜ் கூறியதாவது:கடந்த, 2018 - 19ல் துவங்கப்பட்ட ஜெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் பள்ளியில், 1,200 பேர் படிக்கின்றனர். 25 கி.மீ., சுற்றளவுக்கு பள்ளி பஸ் வசதியுண்டு. கே.ஜி.,-ல் இருந்தே பிள்ளைகளுக்கு போனிக்ஸ் உச்சரிப்பு மற்றும் மாண்டிசோரி கல்வி முறையில் பாடம் நடத்தி, அவர்களின் கற்பிக்கும் திறமையை மேம்படுத்துகிறோம். ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை திறன் மேம்பாடு பயிற்சி.வரும், 4ம் வகுப்பு முதல், ஹிந்தி பயிற்சி மற்றும் தேர்வு, 5ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சான்றிதழ் பயிற்சி, 6ம் வகுப்பு முதல் ஐ.ஐ.டி., நீட், ஜெ.இ.இ., நுழைவு தேர்வுக்கு பயிற்சி வழங்குகிறோம். பொதுத் தேர்வை எளிதாக எதிர்கொள்ள, நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு கல்வி ஆலோசனை வழங்கி வருகிறோம்.செந்தில்முருகன் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இப்பள்ளியில், கிராம, நகர்ப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதே நோக்கம். 10ம் வகுப்பில் 490 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு முழு ஸ்காலர்ஷிப், 475 முதல், 489 மதிப்பெண் பெற்றவருக்கு, 50 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கி, பிளஸ் 1 வகுப்பில் இணைக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.