உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெற்றியை அறுவடை செய்த வேலவன் பள்ளி மாணவர்கள்

வெற்றியை அறுவடை செய்த வேலவன் பள்ளி மாணவர்கள்

திருப்பூர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், வேலவன் பள்ளி மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.பலவஞ்சிபாளையத்தில் செயல்படும் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரியதர்ஷினி 494 மதிப்பெண் பெற்று முதலிடம் ெபற்றார். இதயெ ஜனிசா 492 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடமும், சண்முக பிரியா 491 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், யஷ்வந்த் 489 மதிப்பெண் பெற்று நான்காமிடமும் பெற்றனர். இப்பள்ளி மாணவி அக்சயா தமிழ் மொழி தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.மேலும், கணிதத்தில் ஏழு பேர் 100 மதிப்பெண்ணும், 14 பேர் 99 மதிப்பெண்ணும் பெற்றனர். அறிவியல் மற்றும் சமூக அறிவியலில், இருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் இப்பள்ளியில் தற்போது 11 ம் வகுப்புக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 97866 02888, 96266 61110 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை