உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம்

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம்

உடுமலை: ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்கு, நாட்டின கோழிக்குஞ்சு, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.கிராமங்களில் நிரந்தரமாக வசிக்கும், கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு, 3,200 ரூபாய் செலவில் கொள்முதல் செய்யும் திறன் உள்ள பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்துடன், 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.சுயசான்று ரசீது சமர்ப்பித்ததும், வங்கிக்கணக்கில் மானியம் விடுவிக்கப்படும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்த சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி, இலவச கறவை மாடு, ஆடு, செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக்கூடாது.நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வமுள்ள, கணவனை இழந்த பெண்கள், அருகே உள்ள கால்நடை மருத்துவமனை டாக்டரை அணுகலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ