உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: கோரிக்கையை வலியுறுத்தி 'டிட்டோ ஜாக்' சங்கத்தில் உள்ள ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், 'அரசாணை, 243 ஐ ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பான சுப்ரீம் கோர்ட் வழக்கு முடியும் வரை, மாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்,' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர், தாராபுரத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ