உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியை தற்கொலை :கணவர்-சகோதரி கைது

ஆசிரியை தற்கொலை :கணவர்-சகோதரி கைது

உடுமலை;உடுமலையில், தங்கையை தற்கொலைக்கு துாண்டியதாக, கணவர் மற்றும் சகோதரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.உடுமலை அருகேயுள்ள குரல்குட்டை மேற்கு தோட்டத்தைச்சேர்ந்தவர் முத்துலட்சுமி, 38. தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்த அவர், கடந்த, 9ம் தேதி துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துலட்சுமியை தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது கணவர் ரங்கநாதன், 55, சகோதரி, தேவி, 44 ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில், முத்துலட்சுமியின் கணவருக்கும், அவரது அக்கா தேவிக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்து, மனமுடைந்த முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாய் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, தற்கொலைக்கு துாண்டியதாக, இருவரும் கைது செய்யப்பட்டனர்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ