உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

திருப்பூர்:திருப்பூரில், பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 39. திருப்பூர், அனுப்பர்பாளையம், ஏ.வி.பி., ரோட்டில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை, 7:30 மணியளவில், நிறுவனத்துக்கு தொழிலாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, முதல் தளத்தில் லிப்ட் அருகில் இருந்து கரும்புகை வெளியேறியது. ஊழியர்கள் அங்கு சென்ற பார்த்த போது, முதல் தளத்தில் இருந்த அட்டை பெட்டி, நுால் கோன்கள், துணி உள்ளிட்டவை மீது தீ பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஆரம்பித்தனர். அந்த தளம் முழுவதும் தீ பரவி எரிந்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து போனது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி