உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மைப்பணியாளர் காத்திருப்பு போராட்டம்

துாய்மைப்பணியாளர் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் ஆபரேட்டர்கள், கம்ப்யூட்டர் பணியாளர், துாய்மை பணியாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலக நடைபாதை பகுதியில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2017 ல் அரசாணை வெளியிடப்பட்டது.மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு, மாதம் 14,503 ரூபாய்; துாய்மை பணியாளர்களுக்கு 12,503; துாய்மை காவலர்கள், பள்ளி சுகாதார பணியாளர், மகளிர் திட்ட தொழிலாளர்களுக்கு 12,503; கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு 15,503 ரூபாய் வழங்கப்படவேண்டும்.அனைத்து திட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கும், இளநிலை உதவியாளருக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) நாகராஜ், பேச்சுவார்த்தை நடத்தினார்.குறைந்தபட்ச சம்பள உயர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, காலை முதல் மதியம் வரை தொடர்ந்த காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை