உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓட்டு எண்ணிக்கை பணி ஒரு வேட்பாளருக்கு 98 முகவர்கள்

ஓட்டு எண்ணிக்கை பணி ஒரு வேட்பாளருக்கு 98 முகவர்கள்

திருப்பூர் : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு, 18 நாட்களே இருப்பதால், ஒவ்வொரு வேட்பாளரும், முகவர்களை நியமிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., -நாம் தமிழர் கட்சி உட்பட, அனைத்து வேட்பாளர்களும், முகவர் நியமனத்துக்கு தயாராகிவிட்டனர்.தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கும் அடையாள அட்டையை பயன்படுத்தியே, அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கும், அங்குள்ள டேபிள்களுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவர்.பதிவான ஓட்டுக்களை சரிபார்க்க வசதியாக, தேர்தலில் பதிவான ஓட்டு விவரம் (படிவம் -17 சி), அனைத்து வேட்பாளருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அது, ஓட்டுச்சாவடி வாரியாக, ஓட்டு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் மற்றும் தலைமை முகவர் வசமும் அளிக்கும் பணி துவங்கிவிட்டது.ஒவ்வொரு வேட்பாளரும், தலைமை முகவர், முகவர், தபால் ஓட்டு முகவர் என, 98 முகவர்களை நியமிக்க வேண்டும். அதற்காக, முழு ஈடுபாடுள்ள கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்து, ஓட்டு எண்ணிக்கைக்கு அனுப்பி வைக்க, சட்டசபை தொகுதி வாரியாக, பணிகள் வேகமெடுத்துள்ளன.'விவி பேட்' இயந்திரங்களில் சேகரமாகிய, சின்னம் பொறிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுகளும் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தனியே ஓட்டு எண்ணிக்கை 'கவுன்டர்' அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதியில், தேர்வு செய்யும் ஐந்து ஓட்டுச்சாவடிகளில் பதிவான 'விவிபேட்' சீட்டுகள் முழுமையாக எண்ணி, பதிவான ஓட்டு விவரத்துடன் சரிபார்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி