திருப்பூர்:திருப்பூரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது; தாழ்வான பகுதியில், மழைநீர் புகுந்தது; போக்குவரத்து முடங்கியது.திருப்பூரில் காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், நேற்று மதியம் கருமேககூட்டங்கள் திரண்டு, மழை துவங்கியது. சூறைக்காற்றுடன் மழை கொட்ட ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்த நிலையில், காற்றின் வேகம் குறையாததால், கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும் பயணிக்க முடியாமல் ஸ்தம்பித்தனர்.தாழ்வான பகுதிகளில், ஒன்றரையடிக்கும் மேலாக மழைநீர் புகுந்தது. ஈஸ்வரன் கோவில் பாலம், ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. மின்வெட்டு ஏற்பட்டது. மாலை 4:00 மணிக்கு மழை துவங்கிய நிலையில், மழை நின்று, இயல்புக்கு திரும்ப, இரவு, 7:00 மணிக்கு மேலும் தொடர்ந்தது.பெருக்கெடுத்த கழிவுநீர்திருப்பூர் புது மார்க்கெட் வீதி. கால்வாய் அடைப்பு மாதக்கணக்கில், சரிசெய்யப்படவில்லை. மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், பாதாள சாக்கடை மூடியை உடைத்துக் கொண்டு, கழிவுநீர் வெளியேறி, ஊற்றெடுத்து, ஆறு போல் ஓடியது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்கள் தடுமாறி கழிவுநீரை கடந்து சென்றன.தென்னை மரத்தில் இடிதிருப்பூர், காலேஜ் ரோடு, 15 வேலம்பாளையம் - கணியாம்பூண்டி வழியில் உள்ளது, பாரதிநகர் ஸ்டாப். இங்கு தென்னந்தோப்பில் ஒரு மரத்தில் மழை பெய்த போது அதிக சத்தத்துடன் இடி விழுந்தது. இடி விழுந்ததால், மழை பெய்து கொண்டிருக்கும் போது, பச்சை மரத்தில், தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. பி.என்.,ரோடு ஸ்தம்பிப்புதிருப்பூர் பி.என்., ரோடு, பிச்சம்பாளையம் சிக்னல் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, 1.5 கி.மீ., துாரத்துக்கு மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நின்று, ஆறு போல் ஓடியது. கார், ஆட்டோ, இலகு ரக வாகனங்கள் செல்லவே முடியவில்லை. ஓரிரு இடங்களில் தண்ணீர் மூன்றடிக்கும் மேல் இருந்ததால், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மிதந்து, சாய்ந்தன. பஸ்களில் சக்கரம், படிக்கட்டு மூழ்கும் வரை மழைநீர் ஓடியதால், பஸ்கள் தடுமாறி பயணித்தன. போக்குவரத்து நெரிசலால், மூன்று கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் தேங்கி நின்றன.நெசவாளர் காலனி, வடக்கு உழவர் சந்தை அருகேயுள்ள குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.---திருப்பூரில் நேற்று மாலை கனமழை பெய்தது.ஈஸ்வரன் கோவில் வீதி, நொய்யல் பாலம் அருகே ஏரி போல் மழைநீர் தேங்கியது.யூனியன் மில் ரோட்டில், மழைநீரில் நீந்தியபடி செல்லும் வாகனங்கள்.ஈஸ்வரன் கோவில் வீதி, நொய்யல் பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்.பி.என்.ரோடு பகுதி ஸ்தம்பித்தது.பிச்சம்பாளையம்புதுார் பிரிவுவடக்கு உழவர் சந்தை குடியிருப்புநெசவாளர் காலனி