உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் பாதுகாக்க யோசனை

நொய்யல் பாதுகாக்க யோசனை

நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன், கலெக்டரிடம் அளித்த மனு:கோவை பகுதியில் இருந்து, கழிவுகள், மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவு, மாநகராட்சி கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. திருப்பூரில் இருந்து ஒரத்துப்பாளையம் வரையிலும், ஆற்றில் கழிவுகள் கலக்கின்றன. நொய்யல் படுகை விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தை தொடர முடியாத நிலை உள்ளது. தென்னை மரங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. சாமளாபுரம், மங்கலம், ஆண்டிபாளையம் துவங்கி, ஒரத்துப்பாளையம் வரை, பாதிப்பு உள்ளது. நொய்யல் ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில், மாதம்தோறும், மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை