உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் திரியும் மாடுகளுக்கு ஒளிரும் பெல்ட் யோசனை

ரோட்டில் திரியும் மாடுகளுக்கு ஒளிரும் பெல்ட் யோசனை

திருப்பூர்;நகரில் ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மாடுகளின் மீது ஒளிரும் பெல்ட்களை, மாட்டி விடலாம் என்பதற்கான செயல் விளக்கம், விநாயக விகாஸ் பள்ளியில் நடந்தது.மாநகரில் ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் நேர்கின்றன. இரவு நேரங்களில் அதிக விபத்துகளும் உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர் ரேணுகாா தலைமையில் ஆய்வு செய்து, ரோடுகளில் சுற்றி திரியும் மாடுகளின் மீது, ஒளிரும் பட்டைகளை மாட்டி விடலாம் என்று யோசனை தெரிவித்தனர். பலரிடம் இதற்கு வரவேற்பு கிடைத்தது.இதனால், தலைமையாசிரியர் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர், குளத்துப்பாளையம் வித்ய விகாஸ் பள்ளியில் செயல் விளக்கம் நடந்தது. விநாயக விகாஸ் பள்ளி முதல்வர் பரமசிவம், எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார், முத்து சரணவவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை