உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவியை கொல்ல முயன்றவர் கைது

மனைவியை கொல்ல முயன்றவர் கைது

திருப்பூர் : தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 38. இவரது மனைவி மகாலட்சுமி, 38. திருப்பூரில் தங்கியுள்ளனர். அவ்வப்போது, தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. கடந்த, ஆறு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இரு நாட்கள் முன்பு மனைவி தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற கணவர், டூவீலரில் பெட்ரோலை ஊற்றி வீட்டு முன்பு தீ வைத்தார். இதை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். கணவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை