உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று நடக்கிறது நீட் தேர்வு 

மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று நடக்கிறது நீட் தேர்வு 

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தின் நான்கு மையங்களில் நீட் தேர்வு இன்று நடக்கிறது. 2,169 பேர் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மாவட்டத்தின் நான்கு மையங்களில் இன்று நடக்கிறது. பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில், 507, ஏ.வி.பி., கல்லுாரியில், 720, திருப்பூர் லிட்டில் கிங்டம் பள்ளியில், 672, கூலிபாளையம், வித்யசாகர் பப்ளிக் பள்ளியில், 720 என நான்கு மையங்களில், 2,169 பேர் தேர்வெழுதுகின்றனர்.ஒரு மையத்துக்கு, 25 முதல், 35 பேர் வீதம், நான்கு மையத்துக்கு பரிசோதனை, தேர்வு நடத்தும் பணி, தேர்வறை பணி என மாவட்டத்துக்கு மொத்தம், 145 பேர் நீட் தேர்வு நடத்த நியமிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மையங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி மனோகரன் தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளை நேற்றும் ஆய்வு செய்தார்.இன்று மதியம், 2:15 க்கு துவங்கும் தேர்வு, மாலை, 5:15 க்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மையத்துக்கு எத்தனை மணிக்கு வர வேண்டும், தேர்வறைக்குள் எத்தனை மணிக்குள் இருக்க வேண்டும், என்னென்ன பொருட்களை எடுத்து வர வேண்டும், எவற்றை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் ஹால்டிக்கெட் பின்புறம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்ற வேண்டும் என தேர்வு ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி