உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடல் மீன்கள் குவிந்தன விற்பனையும் அமோகம்

கடல் மீன்கள் குவிந்தன விற்பனையும் அமோகம்

திருப்பூர்:தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, கேரளா மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் இருந்து நேற்று மீன் வரத்து அதிகரித்தது. ஒரே நாளில், 37 டன் கடல் மீன் வந்து குவிந்ததால், மீன் விலை குறைந்தது. நேற்று, கடல் மத்தி, 180, அணை மத்தி, 90, சங்கரா, 250, வஞ்சிரம், 550, கடல் பாறை, 450, டேம் பாறை, 160, நண்டு முதல் ரகம், 450, இரண்டாம் ரகம், 320, விளாமீன், 480, படையப்பா, 350 ரூபாய்க்கு விற்றது. மீன் ரகங்கள் விலை, 50 முதல், 80 ரூபாய் வரை குறைந்ததால், அதிகளவில் மீன்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷங்களால் கடந்த வாரங்களில் மீன் விலை குறைந்த போதும், வாடிக்கையாளர் குறைவாக வந்தனர். ஆனால், நேற்று அதிகளவில் மீன் வந்ததோடு, விற்பனையும் சுறுசுறுப்பாக நடந்ததால், மீன் வியபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.---மீன் வாங்குவதற்காக, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில், ஏராளமானோர் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ