உடுமலை:உடுமலை யு.கே.சி., நகர் பள்ளியில், சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.உடுமலை நகராட்சிக்குட்பட்ட, யு.கே.சி., நகரில், துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், யு.கே.சி., நகர் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புகளைச்சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்தில், அரசின் அறிவுசார் மையம் கட்ட, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.அறிவு சார் மைய கட்டடத்துக்கு, சுற்றுச்சுவர் கட்டப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை.இதனால், இரவு நேரங்களில், சமூக விரோதிகள், உள்ளே வந்து, பள்ளி கட்டமைப்புகளை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.சில நேரங்களில், பள்ளி காலியிடத்தில், காலி மதுபாட்டில்களை வீசி சென்று விடுவதால், மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.