உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதை உறங்குவதில்லை தளிர் விடுகிறது பனை

விதை உறங்குவதில்லை தளிர் விடுகிறது பனை

அனுப்பர்பாளையம்;நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் கடந்த ஆட்சியில் குளம், குட்டை துார் வாரப்பட்டது. துார்வாரும் பணியில் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.திருப்பூர், 25வது வார்டு, காவிலிபாளையம் புதுாரில் உள்ள குட்டையை மக்கள் நல அறக்கட்டளை, ஸ்ரீபுரம், முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் சேர்ந்து துார் வாரினர்.துார் வாரிய போது, குட்டையின் கரைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றினர்.தொடர் மழையில் குட்டையில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீர் தேக்கத்தால் ஊன்றப்பட்ட பெரும்பான்மையான பனை விதைகள் முளைத்து தளிர் விட்டு வளர்ந்து வருகிறது.இதனால் விதை ஊன்றிய தொண்டு அமைப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காலம் தொடங்கும் முன் குட்டையில் விடுபட்ட இடங்களில் மேலும் பனை விதை நட தொண்டு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்