உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் திருட்டு: குண்டர் சட்டம் பாய்ந்தது

தொடர் திருட்டு: குண்டர் சட்டம் பாய்ந்தது

பொங்கலுார்:பொங்கலுாரில் வீடு புகுந்த நகை திருடியவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்தவர் மணி மாது, 55. பொங்கலுார் ஒன்றியம், கொசவம்பாளையத்தில் கடந்த ஜனவரியில் நாச்சிமுத்து என்பவரது டூ வீலர் திருடியது, கடந்த பிப்., மாதம், பொங்கலுார் தாயம்பாளையத்தில் வடிவேலன் என்பவரின் வீடு புகுந்து பத்து பவுன் தங்க நகை மற்றும் டூ வீலர் திருடியது போன்ற பல வழக்குகள் அவர் மீது உள்ளது. அவர் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தொடர் திருட்டில் ஈடுபட்டதால் எஸ். பி., பரிந்துரையை ஏற்று கலெக்டர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை அவிநாசிபாளையம் போலீசார் அவரிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை