உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போனை நெஞ்சில் அணைத்தபடி உயிரைப் பறிகொடுத்த வாலிபர்

போனை நெஞ்சில் அணைத்தபடி உயிரைப் பறிகொடுத்த வாலிபர்

திருப்பூர்;திருப்பூர், தாராபுரம் ரோடு பொன்கோவில் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 21; லட்சுமி நகரில் உள்ள நிறுவனத்தில் லேப்-டாப் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை திருப்பூர் கோவில் வழி அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.ரோட்டை டூவீலரில் கடக்க முயன்ற ஒருவர் மீது மோதிய வேகத்தில், அங்கிருந்த மையத்தடுப்பில் மோதி படுகாயமடைந்து இறந்தார். நல்லுார் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தை மீட்க சென்ற போது, வாலிபர் தன்னுடைய மொபைல் போனை நெஞ்சோடு இறுக பற்றியபடியே இறந்து கிடந்தார்.உயிர் போவது தெரியாமல் உடமையை பாதுகாக்கும் நோக்கில், மொபைல் போனை நெஞ்சோடு சேர்த்து வைத்தாரா என்று தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ