உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீரன் சின்னமலை சொந்த ஊரில் தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை

தீரன் சின்னமலை சொந்த ஊரில் தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை

திருப்பூர்:தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, தமிழக அரசு சார்பில், அவரது சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர், தீரன் சின்னமலையின், 219 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தீரன் சின்னமலையின் சொந்த ஊரான, திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, மேலப்பாளையத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.மேலப்பாளையம் சமுதாயக்கூடத்தில், தீரன் சின்னமலையின் படம் அலங்கரிக்கப்பட்டு, நேற்று மலர் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தீரன் சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில்அரசன், காங்கயம் ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்பினர், மேலப்பாளையம் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை