உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரச்னைகள் பல தினுசு... தீர்வு காண வேணும் மனசு!

பிரச்னைகள் பல தினுசு... தீர்வு காண வேணும் மனசு!

கிடப்பில் சாலைப்பணிதிருப்பூர், 45வது வார்டு, முகமதியார் இரண்டாவது வீதி, டூம்லைட் மசூதி வீதி பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்டது. ரோடு போடாமல் ஆறு மாதமாக அப்படியே உள்ளது.- அப்துல் ஜப்பார், திருப்பூர்.கழிவுநீர் தேக்கம்திருப்பூர், தென்னம்பாளையம் ரேஷன் கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் கலந்து மழைநீர் அவ்வப்போது தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. பொருட்களை நின்று வாங்க முடியவில்லை.- ரமேஷ், தென்னம்பாளையம்.மின் கம்பம் அபாயம்திருப்பூர், 26வது வார்டு, சாமுண்டிபுரம், மாரியம்மன் கோவில் முதல் வீதியில் மின்கம்பம் அடிப்பாகம் சேதமடைந்து, விழும் நிலையில் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.- முருகேசன், சாமுண்டிபுரம். (படம் உண்டு)சாயத்துடிக்கும் மரம்பெருமாநல்லுார் - குன்னத்துார் ரோடு, அணைப்பதி அருகே வறண்டு நிலையில் ரோட்டோரத்தில் பெரிய மரம் உள்ளது. காற்று அடிக்கும் போது ஆடுகிறது. விழும் முன் மரத்தை அகற்ற வேண்டும்.- சுந்தரமூர்த்தி, அணைப்பதி. (படம் உண்டு)'பேட்ச் ஒர்க்' அவசியம்திருப்பூர், சூர்யா நகர், லட்சுமி நகர் எக்ஸ்டன்சன் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- ஜெயபாலாஜி, லட்சுமிநகர். (படம் உண்டு)அனுப்பர்பாளைம் - ஆத்துப்பாளையம் வழி, பெஸ்ட் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அதிகளவில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.-- கண்ணன், ஆத்துப்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், முருகம்பாளையம், சுபாஷ் ஸ்கூல் முதல் அத்வைதா பள்ளி வரை ரோடு குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.- மகேஷ்வரி, முருகம்பாளையம். (படம் உண்டு)சாலை மோசம்கணியாம்பூண்டி - ராக்கியாபாளையம் வழி, ஜெயமாருதி நகரில் நெடுஞ்சாலைத்துறை ரோடு மழைநீர் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து வருகிறது. சாலையை சீரமைக்க வேண்டும்.- ரவி, ஜெயமாருதி நகர். (படம் உண்டு)இருள்சூழ் வீதிதிருப்பூர், 32 வது வார்டு, சூர்யா காலனி - கோல்டன் நகர் வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.- சங்கர்சதீஷ், சூர்யாகாலனி. (படம் உண்டு)மக்கள் மூச்சுத்திணறல்திருப்பூர், 47வது வார்டு, முதலிபாளையம், விருப்பணக் கவுண்டம்பாளையம் கிராமத்தில் கொட்டப்படும் மாநகராட்சி குப்பைகள் கொட்டி தீ வைப்பதால், புகை மூட்டம் இருப்பதால், பலரும் சுவாசிக்க சிரமப்படுகின்றனர்.- பிரவீன்குமார், முதலிபாளையம். (படம் உண்டு)குப்பை தேக்கம்திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் கடைகள் முன் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகள் அகற்றுவதில்லை. பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு துர்நாற்றம் வீசுகிறது.- விஜி, மத்திய பஸ் ஸ்டாண்ட். (படம் உண்டு)பணிகள் மந்தம்திருப்பூர், அனுப்பர்பாளையம், நேருவீதியில் கால்வாய் சீரமைக்க இடிக்கப்பட்டு, பத்து நாட்களாக அப்படியே போட்டு வைக்கப்பட்டுள்ளது. இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், குடிநீரும் வருவதில்லை.- சிவா, நேரு வீதி. (படம் உண்டு)மின் விபத்து அபாயம்திருப்பூர், திருமலை நகர் மூன்றாவது குறுக்கு வீதியில் மின் ஒயர்கள் அறுந்து தொங்குகிறது. மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- குணசேகரன், திருமலை நகர். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், வளர்மதி பஸ் ஸ்டாப் எதிரில், குறுக்கு வீதியில், பிரதான குழாய் உடைந்துள்ளது. தண்ணீர் வினியோகிக்கும் போதெல்லாம் சாலை முழுதும் வீணாகிறது.- நாராயணசாமி, வளர்மதி ஸ்டாப். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி