உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைகளுக்கு பஞ்சமில்லை... மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

குறைகளுக்கு பஞ்சமில்லை... மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

திருப்பூர்:பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி, அவிநாசி, புஞ்சை தாமரை குளம் பகுதி மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு திரண்டுவந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை மனுவாக எழுதி, வழங்கினர். கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் ஆகியோர், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்; உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு ஒப்படைக்கப்பட்டது.மதுக்கடைக்கு எதிர்ப்பு-------------------பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பூபாலன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:கரைப்புதுார் ஊராட்சியில், 2 மதுக்கடைகளும், ஒரு தனியார் மதுக்கூடமும் செயல்படுகிறது. இந்நிலையில், லட்சுமி நகர் பகுதியில் மேலும் ஒரு மதுக்கடை அமைத்தால், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர், தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்; எனவே, மதுக்கடை அமைக்க தடைவிதிக்கவேண்டும். * குடிமங்கலம் கிராமத்திலிருந்து 2 கி.மீ., தொலைவில், டாஸ்மாக் மதுக்கடை (கடை எண்: 2330) செயல்படுகிறது. இதனை எங்கள் கிராமத்துக்கு அருகாமையில் மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கோவில், பள்ளிக்கூடம், குடியிருப்பு நிறைந்த பகுதிக்கு மதுக்கடையை இடம்மாற்றினால், மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்படும்; ஆகவே, மதுக்கடையை இடம்மாற்றக்கூடாது, என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். சமுதாய நலக்கூடம் கட்டணும்!--------------------------மா.கம்யூ., முத்துசெட்டிபாளையம் கிளை செயலாளர் அவிநாசியப்பன்: அவிநாசி பேரூராட்சி, முத்துசெட்டிபாளையத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2016, ஜூலையில், சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், எட்டு ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கவில்லை. எனவே, சமுதாய நலக்கூடம் உடைனே கட்ட வேண்டும். கால்நடை மருந்தகம் வேண்டும்----------------------------தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர்:பொங்குபாளையத்தில் ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, எட்டு கிலோ மீட்டர் துாரத்துக்கு செல்லவேண்டியுள்ளதால் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பொங்குபாளையத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது; அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.குடிநீர் சப்ளை சீராக்கணும்!-----------------------காளம்பாளையம் மா.கம்யூ., கிளை செயலாளர் விஸ்வநாதன்:திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு, தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் ஆற்று குடிநீர் வழங்கும் வகையில், கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுகிறது. அதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.இந்த திட்டத்தில், பொங்குபாளையம் ஊராட்சி, 3 மற்றும் 8 வது வார்டை சேர்ந்த சில பகுதிகள் விடுபட்டுள்ளன. ஏற்கனவே, 2,3வது திட்ட குடிநீரும் சரிவர கிடைப்பதில்லை. பொங்குபாளையத்தில் விடுபட்ட பகுதிகளை சேர்ந்து, குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு அனுப்பியுள்ளோம். விடுபட்ட பகுதி குடியிருப்புகளை இணைத்து குடிநீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.சாலையை சீரமைக்க வேண்டும்-------------------------அவிநாசி, புஞ்சை தாமரைக்குளம் பொதுமக்கள்: அவிநாசி ஒன்றியம், புஞ்சை தாமரைக்குளம் ஏ.டி., காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். தாமரைக்குளக்கரையில் அமைந்துள்ள மயானத்துக்கு செல்லும் வழியில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளன. இதனால், 3 கி.மீ., சுற்றி தான் மயானத்துக்கு செல்லமுடிகிறது. தாமரைக்குளம், அண்ணமார் கோவில் முதல் ஊருக்கு செல்லும் சாலையை சரி செய்து கொடுக்கவேண்டும்.கடந்த, 2 ஆண்டாக, எங்கள் கிராமத்துக்கு மேட்டுப்பாளைம் குடிநீர் சரிவர சப்ளையில்லை. குடிநீர் முறையாக கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவூரில் கடந்த நான்கு மாதங்களாக மின் அளவீடு செய்யப்படவில்லை. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் மின் அளவீடு செய்யவேண்டும். ஆரணி வாய்க்கால் ஆக்கிரமிப்பு---------------------------மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவு கிராம விவசாயிகள் அளித்த மனு:காரத்தொழுவு கிராமம் ராஜவாய்க்கால் மடை எண், 50 மற்றும் 52 வழியாக, 20 அடி அகல ஆரணி வாய்க்கால் வாயிலாக பயன்பெற்று வந்தோம். கடந்த இரண்டு ஆண்டாக, சிலர் வாய்க்காலை ஆக்கிரமித்து உள்ளனர். இலவச மின் இணைப்பை பயன்படுத்தி, அமராவதி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடி, தங்கள் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், கடைமடை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுவருகிறோம். எனவே, ஆரணி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 575 மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை