உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்கூரை இல்லை பயணியர் தவிப்பு

நிழற்கூரை இல்லை பயணியர் தவிப்பு

உடுமலை : உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு நிழற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், பல்வேறு கிராமங்களுக்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள், பயணியர் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியதுள்ளது.குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அருகிலுள்ள கடைகளின் கூரை நிழலில் அவர்கள் நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, யூனியன் பஸ் ஸ்டாப்பில், பயணியர் நிழற்கூரை அமைக்க, உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை