உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருந்தகம் மட்டும் திறக்கின்றனர் மருத்துவம் பார்க்க வருவதில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு

மருந்தகம் மட்டும் திறக்கின்றனர் மருத்துவம் பார்க்க வருவதில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு

பல்லடம்:மருந்தகத்தை திறந்து வைத்துவிட்டு, கால்நடை மருத்துவர்கள் வருவாய் பார்க்க சென்று விடுவதாக, பல்லடம் அருகே அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், கால்நடை விவசாயிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். பல்லடம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கோடங்கிபாளையம் ஊராட்சி இணைந்து அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், காரணம்பேட்டை உழவாலயம் மண்டபத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். வேளாண், கால்நடை, வருவாய் துறை, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: கால்நடைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள் வருவது குறித்து தகவலே தெரிவதில்லை. கால்நடை மருந்தகங்களில், காலை 10:00 மணிக்கு வந்து 11:00 மணிக்கு வருவாய் பார்க்க வெளியே சென்று விடுகின்றனர். வெகு தூரத்தில் இருந்து மாடு கன்றுகளுடன் வரும் விவசாயிகளான நாங்கள் கால் கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே, கோடங்கிபாளையம் கிராமத்துக்கு தனியாக கால்நடை மருந்தகம் வேண்டும் என, ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கையை எத்தனை மேடையில், எத்தனை மைக்கில் தெரிவிப்பது? நாய்களாலும், மயில்களாலும் விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்தவில்லை எனில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் பேசினர். அதன்பின், பேசிய அதிகாரிகள், இதுபோன்ற குறைகள், புகார்களை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறுங்கள் என்றனர். இதையடுத்து, அரசின் மானிய திட்டங்கள், சலுகைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தினர். ----------------------காரணம்பேட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி ஆவேசமாக பேசிய விவசாயி.கால்நடை மருந்தகங்களில், காலை 10:00 மணிக்கு வந்து 11:00 மணிக்கு வருவாய் பார்க்க வெளியே சென்று விடுகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை