உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கத்திக்குத்து சம்பவம் மூவருக்கு சிறை

கத்திக்குத்து சம்பவம் மூவருக்கு சிறை

திருப்பூர்;திருப்பூர், மண்ணரை பகுதியில், வாடகை வீட்டில் வசிப்பவர் குமரேசன், 40. பனியன் கம்பெனி தொழிலாளி. அருகேயுள்ள மற்றொரு வீட்டில் மூன்று பேர் தங்கியிருந்தனர். இவர்கள் அடிக்கடி அந்த காம்பவுண்ட்டுக்குள் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.கடந்த 2020 டிச., 25ம் தேதி இரவு அவர்கள் குமரேசனுடன் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில், அவர்கள் கத்தியால் குமரேசனை வெட்டிக் காயப்படுத்தினர். வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.இது குறித்த வழக்கு திருப்பூர் முதன்மை சப் கோர்ட்டில், நீதிபதி ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் பஷீர் அகமது ஆஜரானார்.இந்த வழக்கில், பனியன் நிறுவன ஊழியர் துர்வாசன், 47 என்பவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, பைனான்ஸ் நிறுவன ஊழியர் சபரி கிருஷ்ணன், 27 மற்றும் கோகுல்நாத், 29 ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி