உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருஞானசம்பந்த சுவாமி குருபூஜை பெருவிழா

திருஞானசம்பந்த சுவாமி குருபூஜை பெருவிழா

அவிநாசி, : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீகருணாம்பிகை கலையரங்கத்தில் திருஞானசம்பந்த சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெற்றது.கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு முற்றோதுதல் நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் மண்டபத்தில் திருமுறை கண்ட பிள்ளையார், நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருஞானசம்பந்த சுவாமி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ