உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிக வருவாய் ஈட்டியதில் திருப்பூருக்கு 20வது இடம்  தெற்கு ரயில்வே தகவல்

அதிக வருவாய் ஈட்டியதில் திருப்பூருக்கு 20வது இடம்  தெற்கு ரயில்வே தகவல்

திருப்பூர்:தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் பட்டியலில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, 20வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டில், 92.35 கோடி ரூபாய் வருவாய் திருப்பூர் ஈட்டியுள்ளது.கடந்த, 2023 - 24ம் நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில்வே ஸ்டேஷன்கள் பட்டியலை, தெற்கு ரயில்வே கடந்த வாரம் வெளியிட்டது. 100 ரயில்வே ஸ்டேஷன்கள் கொண்ட இப்பட்டியலில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், 20வது இடம் பெற்றுள்ளது. 2023 ஏப்., முதல், 2024 மார்ச் வரையிலான, 12 மாதத்தில், 92 கோடியே, 35 லட்சத்து, 93 ஆயிரத்து, 487 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்லும் ரயில்கள், டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள், முன்பதிவில்லா டிக்கெட் பெற்று பயணிப்போர், சரக்கு புக்கிங், பார்சல் அனுப்பி வைப்பு உள்ளிட்ட வகையில், 92 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சரக்கு புக்கிங்கை விட, பயணிகள் டிக்கெட் வாயிலாகவே கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி