உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் நாளை நிகழ்ச்சி

திருப்பூரில் நாளை நிகழ்ச்சி

திருப்பூர்;திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நாளை (7ம் தேதி), 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது; இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.விரைவில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாக உள்ளது. பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில் ஆன்லைனில் கவுன்சிலிங் நடக்கவுள்ளது.இதில் பங்குபெற தயா ராகி வரும் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க, தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை தெரியப்படுத்த 'தினமலர்' நாளிதழ் சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி - 2024' என்ற இந்நிகழ்ச்சியை, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிகல்லுாரியுடன் இணைந்து, மாநிலம் முழுதும் 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருகிறது. கோவை, பொள்ளாச்சியில் இன்றும், நாளை (7ம் தேதி) திருப்பூரிலும் நடத்தப்படுகிறது.நாளை, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை அண்ணா பல் கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு தேவையான, விரிவான தகவல்களை வழங்கி, இன்ஜினியரிங் கவுன்சிலிங், உயர் படிப்புகளுக்கு வழிகாட்டுகின்றனர்.'தினமலர்' நாளிதழுடன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பித்த மாணவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்க இன்றே தயாராகுங்கள். நாளை பங்கேற்கும் உங்கள் செவிகளை நிறைக்க காத்திருக்கின்றன, கல்வியாளர்களின் மெச்சத்தகுந்த ஆலோசனைகள்; இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.பாடப்பிரிவுகளின் எதிர்காலம்அறிந்தால் சிறப்பு அல்லவா!நிகழ்ச்சியில் பங்கு பெறுவோருக்கு, வேலைவாய்ப்பு மிகுந்த இன்ஜினியரிங் பாடப்பிரிவு எவை, ஆன்லைன் கவுன்சிலிங் விதிமுறைகள் என்ன, சிறந்த கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது எப்படி, 'கட் ஆப்' மதிப்பெண் முக்கியத்துவம், தரவரிசை மற்றும் விருப்ப பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட தலைப்புகளில், மாணவ, மாணவியரின் பல்வேறு சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் விரிவான விளக்கம் தர உள்ளனர்.சிறந்த கல்லுாரியை தேர்வு செய்ய, என்ன செய்ய வேண்டும், வரும் காலத்தில் எந்த படிப்புக்கு மவுசு கூடும் அல்லது குறையும், பாடப்பிரிவுகளின் எதிர்காலம் எப்படி, கோர் இன்ஜினியரிங் படிப்பில் கிடைக்க பெறும் வாய்ப்பு என்பது குறித்தும் விரிவான விளக்கம் தரப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை