உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் அனுமதி

பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் அனுமதி

உடுமலை;திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு, இரு நாட்களுக்கு பின், நேற்று சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த இரு நாட்களாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், மழை பொழிவு குறைந்து அருவியில் நீர்வரத்து சீராக இருந்ததால், நேற்று காலை முதல், சுற்றுலா பயணியர் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதமான சூழலில், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில், நுாற்றுக்கணக்கானோர் குளித்து மகிழ்ந்தனர். கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை