உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜவுளி உற்பத்தி பயிற்சி

ஜவுளி உற்பத்தி பயிற்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கம் (சிட்ரா) மூலம், ஜவுளி உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழக துணி நுால் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழக வழிகாட்டுதல்படி இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர், https://tntextailes.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் விவரங்களை பதிவு செய்யவேண்டும். விவரங் களுக்கு, திருப்பூர் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் உள்ள ஜவுளித்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை, 0421 2220095 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ