உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்கூரை இல்லாததால் பயணியர் தவிப்பு

நிழற்கூரை இல்லாததால் பயணியர் தவிப்பு

உடுமலை : உடுமலை தளி ரோட்டில், பிரதான பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார், மூணார் பகுதிகளுக்கு பஸ்கள், வாகனங்கள் செல்கின்றன. இதுமட்டுமல்லாமல், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த நகரங்களுக்கு செல்கின்றன.மேலும் தளி ரோட்டில், வணிக கடைகள், நகராட்சி அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன.இதில் யூனியன் பஸ் ஸ்டாப் பிரதானமாக உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பஸ் ஏற வரும் பயணியர், வெயில், மழையில் நீண்ட நேரம் சிரமப்பட வேண்டியதுள்ளது.எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்