உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரம் வளர்ப்பு கட்டாயமாக்க வேண்டும்! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மரம் வளர்ப்பு கட்டாயமாக்க வேண்டும்! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பல்லடம்;நீர்நிலைகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.கட்சி சார்பற்ற விவசாயி கள் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பசுமை பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்படுகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை தடுக்கவும் மரங்கள் வளர்ப்பு என்பது மிகவும் அவசியம்.ஆனால், தமிழகத்தில் மரம் வளர்ப்பு என்பது பெயர் சொல்லும் அளவுக்கு நடந்து வருகிறது. எனவே, நுாறு நாள் வேலை உறுதித் திட்டத்தை பயன்படுத்தி, மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம், மரம் வளர்ப்பில், தமிழக அரசு, நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்க வேண்டும்.தமிழகம் முழுவதும், ஊராட்சிகள் வசம் உள்ள ஏரி, குளம் குட்டை, நீர் நிலை ஓடைகளில், மரங்கள் வளர்த்து பராமரிப்பதை, ஊராட்சி தலைவர்களின் கட்டாய பணியாக்க சட்டம் இயற்ற வேண் டும். இந்தியாவிலேயே, தமிழகம்தான் இயற்கையை பேணுவதில் முதன்மை மாநில மாக திகழ்கிறது என்ற பெருமையை பெற வேண்டும்.எனவே, மரம் வளர்ப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி, தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும். மேலும், நமது மாநில மரமான பனை மரத்தின் இன்றியமையாமையை உணர்ந்து, பனை மரங்களை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை