பல்லடம்:'சிறப்பு வகுப்பால் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளதாக,' மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற பல்லடம் யுனிவர்சல் பள்ளி மாணவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பல்லடம் அருகேயுள்ள சேடபாளையம் யுனிவர்சல் பள்ளி மாணவி மகாலட்சுமி, 598 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.இது குறித்து மகாலட்சுமி கூறியதாவது:கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், வணிக கணக்கு ஆகியவற்றில், 100க்கு 100 மதிப்பெண், தமிழ், ஆங்கிலத்தில், தலா, 99 மதிப்பெண் பெற்றுள்ளேன். இதற்காக எனக்கு உதவிய பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பால் தான் சிறந்த மதிப்பெண் பெற முடிந்தது. ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது எனது லட்சியம். இதற்காகவே, வணிக கணக்கு பாடப்பிரிவு எடுத்ததுடன், சி.ஏ., வகுப்புக்கும் சென்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்த இளையராஜா- - மது தம்பதியரின் மகள் மகாலட்சுமி. 20 ஆண்டுக்கு முன் மாரடைப்பால் இளையராஜா இறந்த நிலையில், அவரின் ஸ்டுடியோ தொழிலை செய்துவரும் மது, தனது மகளை படிக்க வைத்துள்ளார்.மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மகாலட்சுமியை பள்ளி தாளாளர் சாவித்ரி, செயலாளர் வினோதரணி, பள்ளி முதல்வர் விஸ்வநாதன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.