உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வள்ளியம்மை நகர் மின் பகிர்மானம் உதயம்

வள்ளியம்மை நகர் மின் பகிர்மானம் உதயம்

திருப்பூர்;திருப்பூர் மின் பகிர்மான வட்டம், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆர்.வி.ஈ., நகர் பிரிவு அலுவலகத்தின், ஆர்.வி.ஈ., நகர் பகிர்மானத்தில் இருந்து, வள்ளியம்மை நகர் என்ற புதிய பகிர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது.புதிய பகிர்மானத்துக்கு, மணியகாரம்பாளையம் மூன்று ரோடு முதல், காமதேனு பேக்கரி வரையிலான பகுதிகள்; வள்ளியம்மை நகர் 1 முதல் 7 வீதிகள், கான்வென்ட் கார்டன் கிழக்கு 3 வீதிகள் வரையான பகுதி ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படுகின்றன.அப்பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய மின் இணைப்பு எண்களை பயன்படுத்த வேண்டும்; புதிய மின் கட்டண அட்டையை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ