உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடை உற்பத்தியை எளிமையாக்கும் வெர்டெக்ஸ் ஆட்டோமேஷன்ஸ்

ஆடை உற்பத்தியை எளிமையாக்கும் வெர்டெக்ஸ் ஆட்டோமேஷன்ஸ்

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்தில், வாடிக்கையாளர் விரும்பும் வகையில் வடிவமைக்க, ஆடை உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 'நிட்ேஷா' கண்காட்சியில் இடம்பெற்றுள்ள, 'வெர்டெக்ஸ் ஆட்டோமேஷன்ஸ்' வாடிக்கையாளரின் பேராதரவை பெற்றுள்ளது.வெர்டெக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது:தாய்லாந்து , சீனா, ஜப்பான் நாட்டு தையல் இயந்திரங்களை, திருப்பூருக்கு விற்பனை செய்து வருகிறோம். ஆடை வடிவமைப்பில், பல்வேறு புதிய மெஷின்கள் வந்துள்ளன. 'போலோ 'டி-சர்ட்' உற்பத்தியில், காலர், 'ஹாப் மூன்', 'ஸ்லீவ்' ஹம்மிங், 'பாட்டம் ஹம்மிங்', 'சைடு சிலிட் மேக்கிங்', 'பாக்கெட் அட்டாச்சிங் மெஷின்', 'சோல்டர் ஜாயினிங்', 'பிளாக்கட் மேக்கிங்', 'பட்டன் ஸ்டிச் இன்டெக்சிங்', 'பட்டன் ேஹால் இன்டெக்சிங்' என, 10 வகையான தையல் மெஷின்களை வழங்கி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வகை மெஷின்களை கொண்டு, ஆடை தயாரிப்பு நேர்த்தியாக இருக்கிறது. அதேபோல், 'அண்டர் கார்மென்ட்' தயாரிப்புக்காக, 'ஆட்டோமேடிக் டாப் எலாஸ்டிக் அட்டாச்சிங் மெஷின், எலாஸ்டிக் ஜாய்னிங் மெஷின்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 98944 56000, 98940 54621 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை