திருப்பூர் : திருப்பூர், கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு முடிவில், சஷ்டிகா ஜெயகாந்தன், கலைவர்ஷினி, ஷாவிசர்மா ஆகியோர் முறையே, 484, 480, 475 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.உயிரியலில் நிஷாலினிஸ்ரீ, பொருளியலில் தன்வந்த், ஜெகன்கார்த்திக், கலைவர்ஷினி, சஷ்டிகா ஜெயகாந்தன் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்ணுக்கு மேல், 23, 400க்கும் மேல், 43 பேரும், மதிப்பெண் பெற்று, பள்ளி நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தருண்ஆதித்யா, சஞ்சய் ஸ்ரீதன் முறையே, 481, 475 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிரண்டு இடம் பெற்றுள்ளனர்.தமிழில் சஹானா, தருண்ஆதித்யா, கணிதத்தில் தருண்ஆதித்யா, சமூக அறிவியலில் தர்ஷனா சென்டம் பெற்றுள்ளனர். 450 மேல், 10 மாணவர்கள், 400 க்கு மேல், 30 பேர், 359 க்கு மேல், 35 பேர், 350 க்கு கீழ், 27 மாணவர்களும் பெற்று, பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் வகையில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களில் வலுவான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவருக்கு கணிதம், அறிவியல் TIME - Foundation மற்றும் integrative வகுப்புகள் நடத்தப்படுகிறது.மருத்துவத்துறை மற்றும் பொறியியல் துறையில் நாட்டின் தலைசிறந்த பல்கலையில் பயில வாய்ப்புக்களை டைம் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள தயார்படுத்துகிறது. சர்வதேச தரவரிசை நிபுணர் குழு அங்கீகாரத்தை பெற்ற QS தரவரிசை QS--I-GAUGE என்ற அமைப்பில் தரவரிசை பட்டியலில் பதிவு செய்யப்பட்டு, திருப்பூர் மாநகரிலேயே தங்க குறியீட்டினை பெற்ற முதல் பள்ளியாக உள்ளது.தற்போது பள்ளியில், 2024 - 2025ம் கல்வியாண்டுக்கான அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.