உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகர் முழுக்க தீவிர கண்காணிப்பு

மாநகர் முழுக்க தீவிர கண்காணிப்பு

திருப்பூர் : சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதி உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் இன்று நடக்கிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், இரு துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மாநகரில் பிரதான ரோடுகளில் உள்ள சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்கள் உட்பட பல்வேறு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.இது தவிர, ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டு உள்ள லாட்ஜ்களில் போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்தனர். சந்தேகப்படும் விதமான நபர்கள் யாராவது தங்கியுள்ளனரா உள்ளிட்டவை கேட்டறிந்தனர்.சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ