உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விகாஸ் வித்யாலயா அபாரம்

விகாஸ் வித்யாலயா அபாரம்

திருப்பூர்: திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அசத்தியுள்ளது.பள்ளியில் தேர்வெழுதிய, 137 பேரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி அளவில், மாணவி பிரித்திகா சிவானி, 500க்கு 496 மதிப்பெண் முதலிடம் பெற்றார்.ஸ்ரீமதி மற்றும் மகேஷ்வர், 493 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடத்தை பகிர்ந்துகொண்டனர். தர்ஷன் மற்றும் நிஷாந்த் ஆகியோர், 492 மதிப்பெண் பெற்று, 3ம் இடத்தை பகிர்ந்துக் கொண்டனர்.கணித பாடத்தில், 19 பேர்; அறிவியலில், ஒருவர்; சமூக அறிவியல் பாடத்தில், 3 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தமிழ் பாடத்தில், 2 மாணவர்கள், 99 மதிப்பெண்; ஆங்கிலத்தில், 8 மாணவர்கள், 99 மதிப்பெண் பெற்றனர்.சாதித்த இவர்களுக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் அனிதா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். 'மதிப்பெண் அடிப்படையில் கல்விக் கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும்; 89034-93702 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ