உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் இணைப்பு; மூதாட்டி மனு

குடிநீர் இணைப்பு; மூதாட்டி மனு

திருப்பூர்:திருப்பூர் ஒன்றியம் காளிபாளையம் புதுாரை சேர்ந்தவர், கண்ணம்மாள், 61.குடிநீர் இணைப்பு வேண்டி, முதல்வருக்கு அனுப்பிய மனு: எனது வீட்டுக்கு விதிமுறைப்படி டிபாசிட் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்திவந்தேன். கடந்த 2020ல், எனது வீட்டுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர்.ஊராட்சி தலைவரிடம் கேட்டபோது, சரியான பதிலளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.கலெக்டர், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர், பி.டி.ஓ., ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த பயனுமில்லை. காளிபாளையம் ஊராட்சி நிர்வாகம், துண்டித்த குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்காதது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, எனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி