உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தண்ணீர் விரயம்; தடுக்காதது அநியாயம்  

தண்ணீர் விரயம்; தடுக்காதது அநியாயம்  

தண்ணீர் வீண்திருப்பூர், மங்கலம் ரோடு, ஜம்மனை பள்ளம் பாலம் பகுதியில் அவ்வப்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.- வின்சென்ட்ராஜ், மங்கலம் ரோடு. (படம் உண்டு)திருப்பூர், ஆர்.வி.இ., லே-அவுட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- கோகுல், ஆர்.வி.இ., லே-அவுட். (படம் உண்டு)திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.- செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)கழிவுநீர் தேக்கம்திருப்பூர், மங்கலம் ரோடு, பூச்சக்காடு பகுதியில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், அப்படியே தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.- விஸ்வா, பூச்சக்காடு. (படம் உண்டு)இருள்சூழ் வீதிபெருமாநல்லுார், மூன்றாவது வார்டு, ஈஸ்வரன் கோவில் வீதியில், 10 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.- குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)சாலை சீராகுமா?திருப்பூர், 63 வேலம்பாளையம் முதல் சின்னக்கரை வரை சாலை சீரமைப்புப் பணி துவங்கி ஒரு மாதமாகிறது. அப்படியே விடப்பட்டுள்ளது.- வினோத், 63 வேலம்பாளையம். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைவீரபாண்டியில் இருந்து கல்லாங்காடு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். ரோடு அமைக்க வேண்டும்.- செல்வராஜ், கல்லாங்காடு. (படம் உண்டு)ரியாக் ஷன்கம்பம் மாற்றம்திருப்பூர், பூலுவபட்டி நால்ரோடு சந்திப்பு சிக்னலில் நடுரோட்டில் சிக்னல் கம்பம் இருப்பதால், விபத்து அபாயம் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. சிக்னல் கம்பம் ஓரமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.- மனோகரன், பூலுவபட்டி. (படம் உண்டு)உடைப்பு சீரமைப்புதிருப்பூர், 28வது வார்டு, சிக்கண்ணா கல்லுாரி அருகே, குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஓடியது. செய்தி வெளியானதும், குழாய் உடைப்பை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர்.- சிவா, காலேஜ் ரோடு. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை