உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்

மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்

திருப்பூர்;''ஜனநாயக கடமையாற்றிய மக்களின் தீர்ப்பை ஏற்கத்தான் வேண்டும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம் தெரிவித்தார்.திருப்பூர் தொகுதியில், பெருந்துறையை சேர்ந்த அருணாச்சலம், அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கினார். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, தேர்தல் பணிகளை செய்து வந்தார்.மூன்று கட்ட பிரசாரம் செய்தார்; திருப்பூர் தெற்கில் பிரசாரத்தை துவக்கியவர், வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் வாகன பேரணியாக சென்று பிரசாரத்தை நிறைவு செய்தார்.ஆளும்கட்சியினர் மற்றும் 'சிட்டிங்' எம்.பி., மீது அதிருப்தி அதிகமாக இருப்பதால், 25 முதல், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க., இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம், ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றிப்பார்த்துவிட்டு, வெளியே சென்றார்.அருணாச்சலத்திடம் கேட்டபோது, ''தி.மு.க., அரசின் மீது, பல்வேறு காரணங்களால் மக்களுக்கு அதிருப்தி உள்ளது. மின் கட்டண உயர்வால் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கஞ்சா புழக்கம் அதிகரித்து, பெண்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.இப்படி, ஆளும்தரப்பின் மீது அதிருப்தி அதிகமாக இருப்பதால், வெற்றி உறுதி என்று நினைத்திருந்தோம். அதனையும் மீறி, வாக்காளர் ஜனநாயக கடமையாற்றி இருக்கின்றனர். மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ