உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

உடுமலை : ஏழு குள பாசன பகுதிகளில், சாகுபடியை சேதப்படுத்தும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.உடுமலை ஏழு குள பாசன பகுதியில், பரவலாக பீட்ரூட் மற்றும் இதர காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது, பெரியகுளம், வடபூதநத்தம் உள்ளிட்ட பகுதிகளில், காட்டுப்பன்றிகள், விளைநிலங்களில் புகுந்து சாகுபடி பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, பீட்ரூட் உள்ளிட்ட சாகுபடியில் அதிக சேதம் ஏற்படுகிறது. ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ள நிலையில், அறுவடை தருணத்தில், காட்டுப்பன்றிகள் விளைபொருட்களை சேதப்படுத்துவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வரப்புகளில், வண்ண சேலைகளை கட்டி விடுதல், துர்நாற்றம் வீசும் மருந்தில் தேய்க்கப்பட்ட கயிற்றை கட்டுதல் என, பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இருப்பினும், காட்டுப்பன்றிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் கவலையில் உள்ளனர். வனத்துறையினர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ