உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுறவு சொசைட்டி அமையுமா? பணிக்கம்பட்டி விவசாயிகள் ஏக்கம்

கூட்டுறவு சொசைட்டி அமையுமா? பணிக்கம்பட்டி விவசாயிகள் ஏக்கம்

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராம விவசாயிகள் கூறியதாவது: பல்லடம் கூட்டுறவு சொசைட்டி மூலம் இங்குள்ள விவசாயிகள் பயனடைந்து வருகிறோம். விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில் தனியாக கூட்டுறவு சொசைட்டி வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.பல்வேறு காரணங்களை கூறி, கூட்டுறவு துறை அதிகாரிகள் கோரிக்கையை தட்டிக் கழித்து வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக, இப்பகுதியில் கூட்டுறவு சொசைட்டி கொண்டு வரக்கூடாது என்ற நோக்கத்தில் சிலர் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. விவசாயிகள் பயனடைவதற்காகத்தான் கூட்டுறவு சொசைட்டிகள் செயல்படுகின்றன. ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமலும், இது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல், அரசியல் காரணங்களுக்காக, கூட்டுறவு சொசைட்டி வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் தட்டிக் கழித்து வருவது ஏற்புடையதல்ல. இது குறித்து மீண்டும் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். மேலும், சட்டசபையில் இது குறித்து வலியுறுத்த வேண்டும் என, மக்கள் பிரதிநிதிகளிடமும் மனு கொடுத்துள்ளோம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி