உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நேற்று பட்டய கணக்காளர் தினவிழா: ரத்ததானம் செய்த ஆடிட்டர்கள்

நேற்று பட்டய கணக்காளர் தினவிழா: ரத்ததானம் செய்த ஆடிட்டர்கள்

திருப்பூர்;பட்டய கணக்காளர் தினத்தையொட்டி, திருப்பூர் கிளையில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின், திருப்பூர் கிளை சார்பில், 76 வது பட்டய கணக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருப்பூர் கிளை தலைவர் செந்தில்குமார் கொடியேற்றி வைத்தார். தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆடிட்டர் தினவிழாவையொட்டி, ரத்ததான முகாம் நடந்தது. முகாமில், 30க்கும் மேற்பட்ட ஆடிட்டவர்களும், சி.ஏ., மாணவர்களும் ரத்ததானம் செய்தனர். சி.ஏ., படிப்புக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கருத்தரங்கம், ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. முன்னதாக, சங்க கிளை அலுவலக வளாகத்தில், பட்டய கணக்காளர் தினத்தை நினைவு கூறும் வகையில், மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை