உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாயில்லா ஜீவன்களுக்கு தண்ணீர் வைக்கலாமே!

வாயில்லா ஜீவன்களுக்கு தண்ணீர் வைக்கலாமே!

திருப்பூர்;பறவைகள் மற்றும் தெருநாய்கள் கோடை வெப்பத்தில் பரிதவிப்பதால், தண்ணீர் வைத்து புண்ணியம் சேர்க்கலாமே என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுவரை இல்லாத வெயில் அடிக்கிறது. வெப்ப அலையால் சூடுபறக்கிறது. தாங்க முடியவில்லை என்றெல்லாம் நாம் வாய்விட்டு புலம்பிவிடுகிறோம். வாயில்லா ஜீவன்களான, பறவைகளும், தெருநாய்களும் தங்களது சோகத்தை கூற முடியாமல், ஒரு வாய் தண்ணீருக்காக, ஊர் முழுவதும் சுற்ற வேண்டியுள்ளது.கோடை காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் பறவைகள் மற்றும் தெருநாய்களுக்கு தண்ணீர் வைக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சிறிய பாத்திரத்தில் தினமும் தண்ணீர் வைப்பதுடன், பறவைகளுக்கு, கம்பு, ராகி, அரிசியாவது வைக்கலாம்.தெருநாய்களுக்கு போக்கிடம் இல்லை என்பதால், வீட்டு வாசலில், ஏதாவது ஒரு பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டிலாவது, தினமும் தண்ணீர் நிரப்பி வைக்கலாம்.வாயில்லா ஜீவன்களுக்கு, ஒவ்வொரு வீடுகளிலும் இதுபோன்ற தண்ணீர் வசதியாவது செய்து கொடுக்கலாமே! கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மரங்களில் ஏராளமான பறவைகள் வசிக்கின்றன. தண்ணீர் வசதியில்லாத காரணத்தால், வனத்துறை சார்பில், சிறிய மண் பாத்திரங்கள் மரத்தில்கட்டி வைத்து,தண்ணீர் மற்றும் தானியங்கள் வைக்கப்பட்டது.சில மாதங்களாக தேர்தல் பணியால், பலரும் மறந்துவிட்டனர். கோடை வெப்பத்தில், பறவைகளுக்கு உதவும் வகையில், தண்ணீருடன், சிறிது தானியத்தை வைக்க, தன்னார்வலராவது முன்வர வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை