உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார் மீது டூவீலர் மோதல்: இளம் விவசாயி பலி

கார் மீது டூவீலர் மோதல்: இளம் விவசாயி பலி

திருப்பூர்:தாராபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.குண்டடம், சிங்காரிபாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 30; விவசாயி. நேற்று முன்தினம் திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். திருப்பூரில் இருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த கார், டூவீலர் மீது மோதியது. அதில், இழுத்து செல்லப்பட்டு, துாக்கி வீசப்பட்ட செல்வகுமார் படுகாயமடைந்து இறந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குண்டடம் போலீசார் விசாரித்தனர். ரோட்டை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை